பீஸ்ட் டிரைலர் புஸ்? காவியை மையப்படுத்தி பரபரப்பு?

பீஸ்ட் டிரைலர்

Posted  43 Views updated 3 months ago
Image

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ய பீஸ்ட் டிரைலர் சமீபத்தில்  வெளியானது. புதிய படத்தின் டிரைலரை பார்த்த எஃபெக்ட்டே இல்லை என ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பி வருகின்றனர். அப்படியே மணி ஹெய்ஸ்ட், கூர்கா, மால் காப், டை ஹார்ட் படங்களின் காப்பி போலவே படம் இருப்பதாக மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர். 
ரசிகர்களின் மனோ நிலையை அறிந்த படக்குழுவினர், படத்தை எப்படியாவது ஓட்டியே ஆகவேண்டும், அதற்கு சர்ச்சையை கிளப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்  ப்ளூசட்டை மாறனை நியமித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கேற்ப சமீபத்தில் ப்ளூ சட்டை மாறன் விஜய் பீஸ்ட் டிரைலரில் காவியை கிழித்து அரசியல் குறியீட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் என சமூக வலைதளத்தில் ட்வீட் போட்டுள்ளார்.
அதே சமயம் படம் மணி ஹெய்ஸ்ட் காப்பி என்றும் மால் காப் காப்பி என்றும் கூர்கா படத்தின் காப்பி என்றும் அஜித் ரசிகர்கள் மீம்களை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர். ஹெயிஸ்ட்டானாவே அப்படித்தான் மணி ஹெயிஸ்ட் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் பீஸ்ட் டிரைலரை பங்கம் செய்து வரும் நிலையில், ஹெயிஸ்ட் படம்னாலே அப்படித்தான் இருக்கும். வேறு எந்த ஹெய்ஸ்ட் படத்தையும் நீங்க பார்க்கவில்லையா? மணி ஹெய்ஸ்ட், கூர்காவுடன் கம்பேர் பண்ணாதீங்க என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Image

விஜய் மிரட்டியிருக்காரு டாக்டர் படத்தின் டிரைலரை பார்க்கும் போதும் இது அப்படியே கோலமாவு கோகிலா டிரைலர் மாதிரியே இருக்கே என ரசிகர்கள் கமெண்ட் அடித்த நிலையில், டாக்டர் படத்தை பார்த்த பின்னர் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரித்து அந்த படத்தை வேற லெவல் ஹிட் ஆக்கினர். விஜய்யின் வெறித்தனமான நடிப்பு ஒன்று போதும் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைக்க என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் பதிலடி கொடுத்து வருகின்றனர். 
ப்ளூ சட்டை மாறன் ட்வீட் "பீஸ்ட் டிரைலர்: காவியை கிழிக்கும் விஜய். தில்லான அரசியல் குறியீடு என ரசிகர்கள் கொண்டாட்டம்." என விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் உடன் ஷேர் செய்ய விஜய் ரசிகர்கள் வழக்கம் போல அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். மாஸ்டர் படத்திலும் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியான போது, லிரிக் வீடியோவில் காவியை விஜய் எதிர்ப்பது போல காட்டியிருப்பார்கள். அப்போதும், அது பெரிய சர்ச்சையானது. பீஸ்ட் படத்திலும் விஜய் காவியை கிழிக்கிறார் என புரமோஷனுக்காக வழியை தேட ஆரம்பித்து விட்டனர். இந்த படத்திற்கும் எதிர்ப்பு வந்தால், ஃப்ரீ புரமோஷன் தானே!

Image

Your reaction?

0
LOL
0
LOVED
0
PURE
0
AW
0
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Comments

  • பீஸ்ட் டிரைலர் புஸ்? காவியை மையப்படுத்தி பரபரப்பு?
  • admin