
ஆஸ்கர் மேடையில் ஸ்மித் நடந்து கொண்ட விதத்தை ஒருசிலர் கண்டனம் தெரிவித்தாலும், பெரும்பாலானோர் பாரட்டியே வருகின்றனர், வில் ஸ்மித்தின் செயலை விட அவர் மன்னிப்பு கேட்டதை நிறைய பேர் பாராட்டினார்.
அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு மொட்டை தலையுடன் காணப்படும் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து ஆஸ்கர் மேடையில் தேவையற்ற கமெண்ட் அடித்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை எச்சரித்த வில் ஸ்மித், உடனடியாக கோபத்தை அடக்க முடியாமல் மேடை ஏறி அவரை அறைந்தார்.

நோயால் அவதிப்படுபவரை கிண்டலடித்த சக நடிகரை ஸ்மித் தாக்கியது தவறில்லை என்ற கோணத்தில் ஒரு பக்கம் ஆதரவுக்கரம் ஸ்மித்தை நோக்கி நீண்ட வண்ணம் உள்ளது.
இந்த நிகழ்வு குறித்து கோலிவுட் நடிகையும், விஜயகுமார் மகளுமான வனிதா விஜயகுமார் ஸ்மித்தின் செயல் பாராட்டுக்குரியது என்ற கோணத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வில் ஸ்மித்தின் பதிவை பகிர்ந்து, "தனது மனைவியை காக்கும் தைரியம். அது போல தனது தவறை ஒப்புக் கொள்ளும் பண்பு... நான் உங்களின் மிகப் பெரிய ரசிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் வில் ஸ்மித்" என பெருமூச்சு விட்டவாறு கூறியுள்ளார்.

0 Comments