ரசிகரிடம் டென்ஷனான ஸ்ருதி

ரசிகரிடம் டென்ஷனான ஸ்ருதி

Posted  119 Views updated 4 months ago
Image

கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து விட்டார். இசைத்துறையிலும் பிரபலமாக இருக்கிறார். சமீப காலமாக தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் வருவதால் செம பிஸியாக இருந்து வருகிறார். தற்போது தனது அப்பா வயதில் இருக்கும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி.
சில ஆண்டுகளுக்கு முன் லண்டனை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக கூறி வந்த ஸ்ருதி, பிறகு அவருடன் பிரேக் அப் ஆகி விட்டதாக அறிவித்தார். அதற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தாவை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிப்பதாக கூறி, மும்பையில் உள்ள ஸ்ருதியின் வீட்டில் இருவரும் லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள்.

Image

சினிமா மட்டுமல்ல இவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விஷயங்களும் ரசிகர்களாலும், மீடியாக்களாலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வரும் ஸ்ருதி, சமீபத்தில் தனது காதலினின் பிறந்தநாள் பார்ட்டியில் பப்ளிக்காக காதலருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலானது.
சமீபத்தில் சோஷியல் மீடியாவில் ஸ்ருதியிடம் “எங்கெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள்” என்று ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் கோபப்பட்டு பதிலளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடி உள்ளார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் உங்கள் உடம்பில் எந்தெந்த பாகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு கோபத்துடன் பதிலளித்த ஸ்ருதி, இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என சொல்லி உள்ளார்.
 

Image

அதோடு, இருந்தாலும் சொல்கிறேன். மூக்கில் மட்டும் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என ஓப்பனாக பதிலளித்துள்ளார். இதற்கு முன்பும் தன்னிடம் போன் நம்பர் கேட்டவர், ஆபாசமாக கேள்வி எழுப்பிய பலருக்கும் செம ஸ்மார்ட்டாகவும், காட்டமாகவும் பதிலளித்துள்ளார் ஸ்ருதி. தற்போது ஸ்ருதி அளித்துள்ள பதிலும் பலரிடம் பாராட்டை பெற்றுள்ளது.

Image

Your reaction?

0
LOL
1
LOVED
0
PURE
0
AW
0
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Comments