மாளவிகா மனோபாலா ஜோடி சேரப்போறாங்க.....

மாளவிகா மனோபாலா ஜோடி

Posted  126 Views updated 4 months ago
Image

அஜித் நடித்த உன்னை தேடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா. சுந்தர்.சி இயக்கிய இந்த படம் 1999 ம் ஆண்டு ரிலீசானது. அதற்கு பிறகு ஆனந்த பூங்காற்றே படத்திலும் அஜித்துடன் சேர்ந்து நடித்தார் மாளவிகா. 
கார்த்திக்குடன் ரோஜா வனம், கமலுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்தார். சித்திரம் பேசுதடி படத்தில் வாழமீனுக்கும் விளங்கு மீனுக்கும் பாடலுக்கு அயிட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்டு செம ஃபேமஸ் ஆனார். 
2007 ம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகினார் மாளவிகா. இவருக்கு ஆரவ் என்ற மகனும், ஆன்யா என்ற மகளும் உள்ளனர். 42 வயதாகும் மாளவிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சுந்தர்.சி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். வந்ததுமே மனோபாலாவிற்கு ஜோடியாக நடிக்க ஓகே சொல்லி ஷாக் கொடுத்துள்ளார்.

Image

இதைக் கேட்டு கோலிவுட்டில் பலர், என்ன கொடுமை சார் இது என தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 
டைரக்டரான மனோபாலா, பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மனோபாலா, சமீபத்தில் எவிக் ஆகி வெளியே வந்தார். இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார். 
சுந்தர்.சி.,யின் காமெடி படம் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்து பிரம்மாண்ட காமெடி படம் ஒன்றை இயக்கி வருகிறார் டைரக்டர் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா படத்தை மிஞ்சும் அளவிற்கு ஒரு காமெடி பிளாக் பஸ்டர் படத்தை கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

Image

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, அமிர்தா ஐயர், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்நிலையில் செட்டில் ஜீவா உள்ளிட்டோருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மனோபாலா. 

Image

Your reaction?

0
LOL
0
LOVED
0
PURE
0
AW
0
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Comments

  • மாளவிகா மனோபாலா ஜோடி சேரப்போறாங்க.....
  • admin