
கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும். எப்போ கல்யாணம் என பல வருடங்களாக இவர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அதற்கு மட்டும் பதில் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார்கள். ஆனால் ஏற்கனவே தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன்தாரா கூறி உள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போது தான் ஒப்புக் கொண்ட படங்களை நயன்தாரா நடித்து முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்து ஷாருக்கான் - அட்லீ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இதற்கிடையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி கோவில்கள் பலவற்றிற்கும் சென்று சாமி தரிசனம் செய்யும் போட்டோக்கள், வெளியில் ஷாப்பிங் செல்லும் போட்டோக்களும் வெளியாகி செம வைரலாகின்றன. நேற்று கூட இருவரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த போட்டோக்கள் வெளியாகின.
மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்து
நயன்தாரா மலையாள கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவில், குருத்வாரா போன்ற இடங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் அப்பா குரியனின் பிறந்தநாளை சமீபத்தில் குடும்பமாக சேர்ந்து கொண்டாடி உள்ளனர். மாமனாரின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராமில் வாழ்த்து பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், நீங்கள் சிரிப்பது, நீங்கள் சாப்பிடுவது, நீங்கள் பார்ப்பது, நீங்கள் எங்களுடன் இருப்பதே மகிழ்ச்சி. அதுவே எங்களின் வாழ்க்கையை அழகாக்குகிறது. நீங்கள் எப்போதும் எங்களுடன் இருக்க இறைவன் உங்களுக்கு எல்லா பலத்தையும், ஆற்றலையும் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் தான் எங்களின் ஆசீர்வாதம் என குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்கு முன்பே நயன்தாரா குடும்பத்தில் இணைய விக்னேஷ் சிவனின் இந்த டிவிட் உதவும் என்று நயன்தாரா ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

0 Comments