புதிய கட்சியா? பழைய கட்சியா சூர்யா அதிரடி முடிவு

சூர்யா அதிரடி முடிவு

Posted  32 Views updated 2 months ago
Image

ஜெய்பீம் படத்தில் இருளர்கள் வாழ்க்கையைப் பற்றியும் அவர்களுக்கு குரல் எழுப்பியும் இருந்த சூர்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கொடுத்தனர்
சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி பேசியுள்ள சூர்ய அரசியலுக்கு வருவது குறித்து அதிரடி பதில் கொடுத்துள்ளார்.
பீல்டில் இருக்கும்போது சம்பாதிப்பதைவிட, அதைவைத்து நிரந்தரமான வருமானத்திற்கு வழி தேடுவது என்பது தற்போதைய காலத்தின் கட்டாயம், சினிமா துறையில் நிரந்தர மார்க்கெட் இருக்காது, ஆனால் அரசியலில் நுழைந்து காலூன்றிவிட்டால் நிரந்தர வருமானம் கிடைக்கும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் பலர் கையாண்டு வருகின்றனர்.

Image

சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழுக்கு நிகராக அங்கு மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது. சூரரைப் போற்று கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் இருளர்கள் படிப்பு அறிவின்மையால் எவ்வாறெல்லாம் இன்றுவரை அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் அதிகாரத்தின் பெயரில் காவல்துறை அதிகாரிகள் எவ்வாறெல்லாம் அவர்கள் மீது அத்துமீறி இருக்கிறார்கள் என்பதை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யா சந்துரு என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பார். சூர்யா இதுவரை பல வேடங்களை ஏற்று நடித்து இருந்தாலும் முதல் முறையாக ஜெய் பீம் படத்தில் வக்கீலாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
நாட்டையே உலுக்கிய சம்பவம்
ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இடையே வெளியாகி பெரும்பான்மையான மக்களிடையே ஆதரவைப் பெற்றது. சில எதிர்ப்புகளும் இப்படத்திற்கு வந்தது. ஜெய் பீம் படத்தின் காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் சேனல்களிலும் அப்லோட் செய்யப்பட்டு சினிமாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளது . சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் சமூக பிரச்சனைகளை பற்றி அழுத்தமாகப் பேசி வரும் சூர்யா சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி பேசியுள்ளார்.
அரசியலுக்கு வரணுமா
பொள்ளாச்சி, விருதுநகர் பாலியல் கொடுமைகளை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான எதற்கும் துணிந்தவன் பட விழாவில் பத்திரிக்கையாளர்கள் சினிமாவில் அரசியல் பேசும் சூர்யா நிஜத்திலும் அரசியலுக்கு வருவாரா.. உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சூர்யா மௌனம்ன பதில் அளித்துள்ளார்.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாக எடுத்து விரைவில் சூர்யா அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் வட்டாரம் கொண்டாடி வருகின்றனர்.

Image

Your reaction?

0
LOL
0
LOVED
0
PURE
0
AW
0
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Comments

  • புதிய கட்சியா? பழைய கட்சியா சூர்யா அதிரடி முடிவு
  • admin