பல திருமணம் செய்தும் நிம்மதி இல்லை நிம்மதியை தேடி மதம் மாறிய வனிதா

நிம்மதியை தேடி மதம் மாறிய வனிதா

Posted  124 Views updated 4 months ago
Image

விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. அதன் பிறகு ராஜ்கிரணுடன் மாணிக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். 
பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்த அவர் சினிமா பக்கமே வரவில்லை. நடிகர் ஆகாஷுடன் காதல், திருமணம், குடும்பத் தகராறு என அவரது வாழ்வில் பல திருப்பங்கள் நடைபெற்றன. ஆகாஷ் இதையடுத்து நடிகர் ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா, ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். அவருடனான திருமண உறவிலும் பல கசப்புகள் ஏற்பட்டன. நடு இதனால் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் பீட்டர் பாலை விட்டு விலகிவிட்டார். பவர்ஸ்டார் சீனிவாசனுடன் கிசு கிசுவில் சிக்கி, சின்னாபின்னமானார்.
பிக்பாஸ் சீசன் 3 தற்போது அவரது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3இல் வனிதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து அவர் பிஸியாக உள்ளார். குக் வித் கோமாளி சீசன் 1 இல் கலந்து கொண்டு வென்றார். பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகினார். 
பிக்பாஸ் அல்டிமேட் பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் தனக்கு அந்த ஷோவில் மரியாதை இல்லை என கூறி வெளியேறினார். தற்போது பிரசாந்தின் அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் மேக்கப், சமையல் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார். 
மேலும் பெண்களுக்கான ஆடை, அணிகலன் விற்பனையகத்தையும் தொடங்கியுள்ளார். 

Image

இந்த நிலையில் அவர் தற்போது புத்த மதத்திற்கு மாறிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தாய்லாந்து சென்ற வனிதா விஜயகுமார் அங்கு கோயில்களுக்கு சென்ற படங்களையும் பகிர்ந்தார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் கூறுகையில் நான் பல ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கைக்காக புத்த மதத்தை தேர்ந்தெடுத்தேன். அதிலிருந்து தாய் மதத்திற்கு திரும்பவே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Image

Your reaction?

0
LOL
0
LOVED
0
PURE
0
AW
0
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Comments

  • பல திருமணம் செய்தும் நிம்மதி இல்லை நிம்மதியை தேடி மதம் மாறிய வனிதா
  • admin