சூப்பர் டூப்பர் ஹிட், தொடர்ந்து வசூல் அள்ளித்தரும் RRR

சூப்பர் டூப்பர் ஹிட், தொடர்ந்து வசூல் அள்ளித்தரும் RRR

Posted  133 Views updated 5 months ago

ராஜமௌலி இயக்கத்தில், நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டுவரும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது.


ஆர்ஆர்ஆர் படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது. கடந்த 9 நாட்களில் இந்தப் படம் உலகளவில் 800 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதித்துள்ளது. படத்தின் பிரம்மாண்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராஜமௌலி இயக்கியுள்ள இந்தப் படம் சுதந்திரப் போராட்டக் காலத்தை கண்முன்னே நிறுத்தியுள்ளது. இரண்டு முக்கியமான ஹீரோக்களை வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ள ராஜமௌலி, இருவரையும் சமமான அளவில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இருவரின் ரசிகர்களுக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளார்.
ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளனர். இவர்களை சுற்றியே கதைக்களம் காணப்படுகிறது. இதேபோல ஆலியா பட், ஷ்ரேயா சரண், அஜய் தேவ்கன் போன்றவர்களுக்கு சிறிய கதாபாத்திரங்களே கொடுக்கப்பட்டாலும் அவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு என இந்தியாவில் இந்தப் படம் ஐந்து மொழிகளில் ரிலீசாகியுள்ளது. உலகளவிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் விருப்பத்துடன் சிறப்பாக மற்றும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இதையடுத்து படத்தின் வசூலும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மற்ற படங்களின் ரிலீசையும் தாண்டி இந்தப் படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது. கடந்த 9 நாட்களில் உலகளவில் படத்தின் வசூல் 800 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இந்திய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இரண்டாவது படம் என்ற சாதனையை இந்தப் படம் செய்துள்ளது.
இந்திய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் படமாக ராஜமௌலியின் பாகுபலி 2 படம் சாதனை புரிந்தது. இந்நிலையில் இந்த வரிசையில் இணைந்துள்ள இரண்டாவது படமாக ஆர்ஆர்ஆர் உள்ளது. 9 நாட்களில் இந்த சாதனையை இந்தப் படம் செய்துள்ளது.
இந்திய அளவில் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய படங்களின் லிஸ்டில் பாகுபலி மற்றும் ரஜினியின் 2.O படங்கள் உள்ளன. இதேபோல பாலிவுட்டின் தங்கல் படம் 390 கோடி ரூபாய் வசூலை இந்திய அளவில் செய்திருந்தது. 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய படங்களில் ராஜமௌலியின் இரண்டு படங்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Image
Image

Your reaction?

0
LOL
1
LOVED
0
PURE
0
AW
0
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Comments

  • சூப்பர் டூப்பர் ஹிட், தொடர்ந்து வசூல் அள்ளித்தரும் RRR
  • admin