சம்பளம் தராத பிக்பாஸ், கமல் வொஸ்ட் கேரக்டர் கொதிக்கும் போட்டியாளர்கள்

கமல் வொஸ்ட் கேரக்டர்

Posted  124 Views updated 4 months ago
Image

கமல் ரொம்ப வொர்ஸ்ட் தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி இப்படி பேச, அதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் ரொம்ப வொர்ஸ்ட்டான கேரக்டர் அவரை பற்றி கேட்காதீங்க.. ரொம்ப கன்டென்ட் கொடுத்துவிடுவேன் என தாடி பாலாஜி மனைவி பேசியது சர்ச்சையை கிளப்பி இருந்தது. இப்படி கணவன் மற்றும் மனைவி இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு உரிய சம்பள பாக்கியே தரவில்லை என நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போடப்படும் கான்ட்ராக்ட் மூலம் போட்டியாளர்களை சித்ரவதை செய்வதாக ஓவியா கூறியிருந்தார். இந்நிலையில், தாடி பாலாஜியும் இப்படி பேசியுள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ரொம்பவே குறையத் தொடங்கி விட்டது.
தாடி பாலாஜியின் மனைவி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசனின் கேரக்டர் ரொம்ப வொர்ஸ்ட் என சொன்னது அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியிருப்பது அடுத்த ஷாக்கை கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் பல மொழிகளில் பல்வேறு சேனல்களில் பல முன்னணி நடிகர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். 
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமாவில் சிலர் ஜொலிக்க, வாய்ப்பு கிடைக்காத பலர் அந்த நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து புலம்பி வருகின்றனர். ரொம்ப வொர்ஸ்ட்டான கேரக்டர்.. கமல் பற்றி அவதூறு.. தாடி பாலாஜி மனைவி நித்யா சர்ச்சை பேச்சு! கணவன் மனைவி சண்டை சாதாரண குடும்பமாக இருந்தாலும், பிரபலங்களின் குடும்பமாக இருந்தாலும், இதுபோன்ற விவாகரத்து பிரச்சனையில் ஏற்படும் கணவன் மனைவி சண்டை பூதாகரமாகி விடுகிறது. 
தாடி பாலாஜி மற்றும் நித்யா இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மகளை தவறான வழியில் நித்யா நடத்தி வருகிறார் என தாடி பாலாஜி சமீபத்தில் அளித்த புகார் பரபரப்பை கிளப்பியது. பேசுறதெல்லாம் பொய் அதே சமயம் தாடி பாலாஜி பேசுறதெல்லாம் பொய் என நித்யா மற்றும் அவரது மகள் இருவரும் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 
மேலும், தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாங்கிய சம்பளம் பற்றியும் நித்யா வெளிப்படையாக பேசி உள்ளார். தாடி பாலாஜி சம்பளம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் தாடி பாலாஜிக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அதையெல்லாம் என்ன செய்தார். எப்போ கேட்டாலும் காசு இல்லை என பொய் பேசுகிறார். நீதிமன்றம் மகளின் செலவுக்காக மாதம் ரூ. 35 ஆயிரம் கொடுக்க சொல்லியும் அதையும் தர அவர் மறுக்கிறார் என தாடி பாலாஜி பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். 
அவமானத்துக்கு கூலி மனைவி நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்க 25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொல்கிறாரே என கேட்டதற்கு, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்தாலே பில்லியனர்ன்னு நினைக்கிறாங்க சார்.. அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது எனக் கூறிய அவர், உள்ளே படுற அவமானத்துக்கு கூலி கொடுக்கிறாங்க என போற போக்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 
குப்பையைக் கொட்டி பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மனைவி நித்யாவுடன் கலந்து கொண்டார் தாடி பாலாஜி. அந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா ராணி மகாராணி டாஸ்க்கின் போது சர்வாதிகாரியாக நடந்து கொண்டு தாடி பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த அவமானத்தை தான் தாடி பாலாஜி சொல்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Image

Your reaction?

0
LOL
0
LOVED
0
PURE
0
AW
0
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Comments

  • சம்பளம் தராத பிக்பாஸ், கமல் வொஸ்ட் கேரக்டர் கொதிக்கும் போட்டியாளர்கள்
  • admin