
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட நடிகர் சிம்பு கண்ணீர் விட்டதால் அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் விக்ரம் 2 படப்பணிகளில் பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகினார்.
இதையடுத்து அந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு வார இறுதியிலும் சிம்பு நிகழ்ச்சியை காண ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் சிம்பு நெகிழ்ச்சியாக ஒரு விஷயத்தை பேசினார். பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர் நிரூப், தனது தந்தையை பற்றி பேசினார். அப்போது சிம்பு கூறுகையில், நானும் ஒரு விஷயத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும். எனக்கு கிடைத்த அப்பா, அம்மா போல அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா என தெரியவில்லை.
(நா தழுதழுக்கிறது) நீங்கள் அனைவரும் என்னை ரசிக்கிறீர்கள் என்றால் அதற்கு என்னை தட்டிக் கொடுத்து கூட்டி கொண்டு வந்தது... என பேசும் போது மிகவும் உடைந்து போய் கண்ணீர் விட்டார். மேலும் அவர் கூறுகையில் என்னை மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பா, அம்மா I love you" என்றார்.

சிம்புவின் படங்கள் வெளியாகும் நேரத்தில் பெரும் பிரச்சினை ஏற்படும். படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும். அந்த தருணங்களில் சிம்புவின் அப்பாவும், அம்மாவும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும் படம் விநியோகஸ்தர்கள் சங்கத்துடனும் சமரசம் பேசுவார்கள். மாநாடு படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பிறகு நடுராத்திரியில் ரிலீஸ் இல்லை என சொல்லப்பட்டு பின்னர் அந்த படம் சொன்ன தேதியில் ரிலீஸானது.
சிம்புவின் இந்த திடீர் அழுகை ஒரு பக்கம் ரசிகர்களை சங்கடப்படுத்தியிருந்தாலும் மறுபக்கம் ‘எல்லாரோட அப்பா அம்மாவும் தங்கள் பிள்ளை முன்னேற்றத்தைத்தான் விரும்புவார்கள்’, சிம்பு ரொம்ப ஓவரா பில்டப் தந்து ஓவர் ஆக்டிங் பண்றார் ‘என்னமா நடிக்குது பயபுள்ள, கமலை மிஞ்சிடும்’ என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் வெளிப்படையாகவே பேசிவருகின்றனர்.

0 Comments